பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடக்கம்
- குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த நிலையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இந்த வாக்கெடுப்பில் 295 எம்பிக்கள் ஆதரவாகவும் ,83 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.