10 மாவட்டங்களில் மட்டும் ஹரியானாவில் போக்குவரத்து சேவையை தொடக்கம்!
10 மாவட்டங்களில் மட்டும் ஹரியானாவில் போக்குவரத்து சேவையை தொடக்கம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இதுவரை 85,940 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 2,753 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஹரியானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், 10 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக ஒரு பேருந்தில் 30 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த மாவட்டங்களுக்குள் பயணிக்கும்போது மேம்பாலங்கள், பைபாஸ் சாலைகளை அதிகம் பயன்படுத்த பேருந்து ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாய்ன்ட் டூ பாய்ன்ட் சேவையாக இயக்கப்படும் இந்த பேருந்துகளில் இடையில் எந்த ஊரிலும் இறங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.