கேரளாவில் 10 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ்..!

Default Image

கேரளாவில் புதிதாக பத்து பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனாவின் அலைகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கேரளாவிலிருந்து 13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பட்ட 13 மாதிரிகளின் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் மாத்ருபூமி, இந்த தொற்று வழக்குகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை சேர்ந்தது என்று கூறியுள்ளார். இந்த ஜிகா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளபடி, ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய ஃபிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு 1947 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1952 ஆம் ஆண்டு உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களுக்கு தோன்றியது. இதனை அடுத்து இந்த வைரஸ் தொற்று ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது பதிவாகியுள்ளது.

மேலும், இந்த ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் நீடிக்கும். இந்த வைரஸ் கொசு கடித்தால் வேகமாக பரவக்கூடியவை, ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் கடிப்பதால் சிக்குன் குனியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு போன்றவை ஏற்படும். இது பெரியளவில் உடல்பிரச்னைகளை ஏற்படுத்தாவிடிலும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களை இது கடித்தால் மைக்ரோசெபாலி என்ற பிறப்பு குறைபாடு, மற்றும் சில அசாதாரண பிற பிறவிகளின் குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது கடுமையாக உள்ளது. கடந்த 10 தினங்களில் 12,000 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு ஜூன் 28-லிருந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மூன்றாம் அலை தோன்றுவதற்கு அருகில் இருப்பதாக மாநில நிர்வாகம் தற்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்