ஸ்டேன் சுவாமி மரணம்: சோனியா காந்தி, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கடிதம்.!
ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம்.
2018ல் பீமா – கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக சமூக போராளி ஸ்டேன் சுவாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை என்ஐஏ அமைப்பு விசாரித்து வந்த நிலையில், பெயில் மறுக்கப்பட்டு வந்தது. இதனிடையே, ஸ்டேன் சுவாமி உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி இன்று காலமானார்.
இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஸ்டேன் சுவாமி சிறைக் காவலில் காலமானதை அடுத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக போராளி ஸ்டேன் சாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ஸ்டேன் சுவாமி மீது பொய்யான வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும், மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட 10 தலைவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.