ஊழியர்கள் 30 நிமிடங்கள் தூங்க அனுமதி – அசத்தும் Wakefit நிறுவனம்!
உங்களால் வேலையில் தூங்குவதற்கு பணம் பெறுவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?.ஆம்,பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தூக்கம் மற்றும் வீட்டு தீர்வுகள் நிறுவனமான(sleep and home solutions company ) வேக்ஃபிட் தனது ஊழியர்களுக்கு அந்தமாதிரியான இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Wakefit இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்ககவுடா, தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் படி,”ஊழியர்கள் இனி தினமும் 30 நிமிடங்கள் வரை தூங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,”பணியிடத்தில் பிற்பகல் தூக்கத்தை இயல்பாக்கவும்,அதற்காக மதியம் 2 முதல் 2.30 மணி வரை எங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வ தூக்க நேரமாக அறிவிக்கவும் முடிவு செய்துள்ளோம். ஏனெனில்,மதியம் தூங்குவதால் நினைவாற்றல்,செறிவு, படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறனுக்கு உதவுவதாக ஆராய்ச்சி காட்டுகிறது.இதற்காக சத்தம் இல்லாத அறையை உருவாக்கியுள்ளோம்.
அதே சமயம்,26 நிமிட தூக்கம் செயல்திறனை 33% அதிகரிக்கும் என்று நாசா ஆய்வு வெளிப்படுத்துகிறது.அதே நேரத்தில் ஹார்வர்ட் ஆய்வு எவ்வாறு தூக்கம் எரிவதைத் தடுக்கிறது(naps prevent burnout) என்பதைக் காட்டுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.அவரது இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே,2019 ஆம் ஆண்டில், Wakefit நிறுவனம் சில பயிற்சியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் என 100 நாட்கள் தூங்குவதற்கு 1 லட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Official Announcement ???? #sleep #powernap #afternoonnap pic.twitter.com/9rOiyL3B3S
— Wakefit Solutions (@WakefitCo) May 5, 2022