கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

Default Image

கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்கள் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய நிலையில்,கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம்  19 மற்றும் 22 ஆம் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்தது. இந்த தேர்வை 8.76 லட்சம் மாணவர், மாணவிகள் எழுதி இருந்தார்கள்.

இதனையடுத்து,வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்டது. இதற்கிடையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் திட்டமிட்டபடி நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இந்நிலையில்,கர்நாடக முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தார்.

அதன்படி, கர்நாடக SSLC தேர்வு முடிவு 2021 எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இத்தேர்வின் முடிவில்,மொத்த தேர்ச்சி சதவீதம் 99.9% ஆகும்.அதில்,மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.99% , ஆனால்,மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 1,28,931 மாணவ,மாணவிகள்  ஏ+ கிரேடு பெற்றுள்ளனர்.

கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு 2021 முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்:

  1. கர்நாடகா 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண https://karresults.nic.in/ அல்லது http://sslc.karnataka.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடவும்.
  2. முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் கர்நாடக SSLC முடிவு 2021 இன் இணைப்பை கிளிக் செய்யவும்.
  3. SSLC ரோல் எண்/பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பிற தேவையான விவரங்கள் போன்ற உங்கள் விவரங்களை உள்ளிடவும்.
  4. கர்நாடகா SSLC முடிவு 2021 திரையில் காட்டப்படும்.
  5. SSLC முடிவு 2021 இன் நகலை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

கர்நாடகா எஸ்எஸ்எல்சி முடிவுகள் 2021: எஸ்எம்எஸ் மூலம் எப்படி சரிபார்க்கலாம்?:

கர்நாடக மாணவர்கள் தங்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமும் சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய, KSEEB10 (ரோல் எண்) என டைப் செய்து 56263 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.அதன்பின்னர்,கர்நாடக 10 ம் வகுப்பு முடிவு மொபைல் திரையில் காட்டப்படும்.

  •  91 முதல் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் A+ தரம் , 81 முதல் 90 மதிப்பெண்களுக்கு – தரம் A.
  • 71 முதல் 80 மதிப்பெண்களுக்கு – தரம் B+, 61 முதல் 70 மதிப்பெண்கள் – தரம் B,
  • 60 முதல் 51 மதிப்பெண்கள்களுக்கு – தரம் C+மற்றும் 35 க்கு 50 மதிப்பெண்களுக்கு – தரம் சி வழங்கப்படும்.இதில்,ஏதேனும் பிழை ஏற்பட்டால், மாணவர்கள் தங்கள் பள்ளிகளை உடனடியாக அணுகவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்