எஸ்.எஸ்.சி தேர்வு: இணையதளம் முடக்கம்.. தேர்வர்கள் கடும் தவிப்பு!

Default Image

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், விண்ணப்ப இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் கடும் தவிப்பு.

எஸ்.எஸ்.சி தேர்வு – இணையதளம் முடங்கியது:

sscexam

இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மத்திய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்.17க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இணையதளம் இயங்காததால் விண்ணப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கால அவகாசத்தை நீட்டிக்க சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்:

su venkatesan mp

இன்றும் இணையதளம் முடங்கியுள்ளதால் தேர்வு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.  இதனிடையே, SSC தேர்வுகளுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க 17ம் தேதி கடைசிநாள், நேற்று முதல் அதற்கான இணைதளம் சரியாக இயங்கவில்லை, உடனே சரிசெய்ய SSC தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இணையதள முடங்கியுள்ளதால் எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், விண்ணப்ப இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் கடும் தவிப்பில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்