மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய, SSC Constable GD தேர்வு முடிவு வெளியானது.!

Default Image

மத்திய பணியாளர் தேர்வாணையம், SSC கான்ஸ்டபிள் GDக்கான தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.

SSC கான்ஸ்டபிள் GD 2022க்கான தேர்வு முடிவு, SSCஇன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) கான்ஸ்டபிள் (GD), அஸ்ஸாம் ரைபிள்ஸில் SSF மற்றும் ரைபிள்மேன் (GD) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத் தேர்வில் சிப்பாய் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள், SSCஇன் http://ssc.nic.in  என்று அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

கடந்த ஜனவரி 10 முதல் பிப்ரவரி 13, 2023 வரை நடத்தப்பட்ட இந்த SSC கான்ஸ்டபிள் GD தேர்வில் எழுத்துத்தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்து உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெறுகிறார்கள்.

உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நோடல் CAPF அதாவது CRPF மூலம் அழைப்புக்கடிதம் வழங்கப்படும். இது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://rect.crpf.gov.in தளத்தில் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்