AI தொழிநுட்பத்தின் வருகை ஐடி ஊழியர்களுக்கு ஆபத்து.? ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை.!

Default Image

ஐடி துறையில் AI தொழில்நுட்ப வளர்ச்சியானது ஐடி மென்பொறியாளர்களை பாதிக்கும் என ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார். 

ஐடி துறையில் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் வருகையில் ஐடி ஊழியர்கள் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார்கள் என.கூறப்படுகிறது .

AI தொழில்நுட்பம் :

காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது நமக்கு எந்த மாதிரியான மென்பொருள்/தேவை வேண்டும் என கோருகிறோமோ, அதனை அப்படியே தரும் தொழில் நுட்பமாகும். இதனால், ஐடி ஊழியர்களுக்கான இந்த வேலைவாய்ப்பில் இந்த AI தொழில்நுட்பமானது சற்று அதிரவளையை ஏற்படுத்தியுள்ளது.

மென்பொறியாளர்கள் :

இந்த AI தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பிரபல மென்பொருள் நிறுவனமான ZOHO நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், செயற்கை நுண்ணறிவான AI  தொழில்நுட்ப வளர்ச்சியானது தொழிலாளர்களுக்கு, குறிப்பாக மென்பொறியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. என குறிப்பிட்டார்.

ஸ்ரீதர் வேம்பு கருத்து :

மேலும், ” மென்பொருள் உருவாக்கம் என்பது இன்று நெசவுதொழில் போன்றது. இதில் AI தொழில்நுட்ப வரவு என்பது ஒரு விசைத்தறி போன்றது. இதன் முதல் வேலை மென்பொறியாளர்களை அச்சுறுத்துவது தான் என்று ஸ்ரீதர் வேம்பு தனது கருத்தை பதிவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்