இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அணிவகுப்பு மரியாதை! இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை!

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயகேவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வரவேற்றனர்.

India -AnuraKumara Dissanayakke

டெல்லி: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அனுர குமார திசநாயகா, இந்தியா வருகை தந்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்றைய தினம் இந்தியா வந்த அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றார்.

இந்த நிலையில், இன்று காலை புது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லதிற்கு வருகை புரிந்த இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயகேவை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இலங்கையில் செப்டம்பரில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இது அவரது முதல் வெளிநாட்டுப் பயணம்.

அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தற்போது, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, டெல்லியில் நடைபெறும் வணிக நிகழ்வில் பங்கேற்பதோடு, புத்த கயாவிற்கும் செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, அனுரகுமார திசநாயக சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்