கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் பொழுது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த வாரம் கூட பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதலில் உயிர் இழப்புகள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என இலங்கை அரசு மறுத்த நிலையில், தற்போது தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற பொழுது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப் படகில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் 20க்கும் மேற்பட்ட விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியதுடன், இந்த பகுதிக்கு வரக்கூடாது என எச்சரித்து விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இராமேஸ்வர மீனவர்கள் வலைகள் அனைத்தையும் இழந்து நஷ்டத்துடன் திரும்பியுள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…