இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது.
இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த சூழலில் இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் அரசியல் குழப்பம்
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் உச்சத்தை தொட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு, பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்தார். இந்நிலையில், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆலோசனை
இந்த நிலையில், இலங்கை பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த அரசு குழப்பங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று இந்தியாவிலும் ஏற்படலாம் என உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு துறை செயலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…