காய்கறி விற்பது போல் பாகிஸ்தானுக்கு உளவு – ஒருவரை கைது செய்த டெல்லி காவல்துறை!!
ராஜஸ்தான் ராணுவ முகாமில் காய்கறி விற்பது போல் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபரை கைது செய்த டெல்லி காவல்துறை.
ராஜஸ்தானில் உள்ள போக்ரான் ராணுவ தள முகாமில் காய்கறிகளை விநியோகித்து வந்த ஹபீப் கான் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ)க்கு கசிய விட்டதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானில் பிகானேரில் வசிக்கும் ஹபீப் கான் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கின்றன. அவர் பல ஆண்டுகளாக காய்கறி ஒப்பந்தக்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது இந்திய ராணுவத்தின் போகாரன் அடிப்படை முகாமுக்கு காய்கறிகளை விநியோகித்து வந்துள்ளார்.
அவர் போகாரனில் அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திரா ரசோய் கேண்டீனில் காய்கறிகளை வழங்குவதும் வழக்கம். முதற்கட்ட விசாரணையில் கான் இராணுவ அதிகாரியிடமிருந்து முக்கியமான ஆவணங்களை எடுத்துள்ளார். மேலும் அந்த ஆவணத்தில் உள்ள தகவல்களை ஐ.எஸ்.ஐக்கு கசிய விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உளவு பார்க்கும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து சிறப்பு போலீஸ் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில், டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு குழு அந்த நபரை கைது செய்து அடுத்தகட்ட விசாரணைக்கு டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.