இந்தியாவின் 9 நகரங்களில் பயன்பாட்டிற்கு வந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி..!

இந்தியாவில் சென்னை உட்பட 9 நகரங்களில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதன் காரணமாக நாட்டில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டது. அதன்படி, ஜனவரி 16 ஆம் தேதி முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி துவங்கப்பட்டது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அரசு அனுமதி அளித்தது. கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசி மே 14 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6% செயல்திறன் கொண்டது. மேலும், இந்த தடுப்பூசியை இந்திய நாட்டில் டாக்டர் ரெட்டி ஆய்வு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த தடுப்பூசியை முதலில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், பாடி, விசாகப்பட்டினம், கோலாப்பூர் மற்றும் மிரியலகுடா ஆகிய 9 நகரங்களில் கூடுதலாக பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்நகரங்களின் பிரபல தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது. இதன் விலை ரூ.995.40 ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025