ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலை ரூ. 995.40-ஆக நிர்ணயம்..!
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலை ரூ. 995.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷில்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, ரஷ்ய உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதனால், இந்தியாவில் அனுமத்திக்கப்பட்ட 3-வது தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி உள்ளது. ரஷ்யா தடுப்பூசியான 1.5 லட்சம் ஸ்புட்னிக் V முதல் தொகுதி ஹைதராபாத்திற்கு கடந்த 1-ஆம் தேதி வந்து சேர்ந்தது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலை ரூ. 995.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலையான ரூ.948 எனவும் அதனுடன் 5% ஜிஎஸ்டி வரி சேர்த்து விற்பனைவிலை ரூ. 995.40-ஆக விற்பனைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசி ஹைதராபாத் “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கி வருகிறது. “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவில் இது 4-வது தடுப்பூசியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.