உத்தரப்பிரதேசம்; கள்ளச்சாரயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் போன்ற பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதனால் கடந்த செப்டம்பர் மாதம் புதிய மசோதா ஒன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாரயம் குடித்ததால் மரணம் ஏற்பட்டால் விற்றவருக்கு மரணத்தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கள்ளச்சாரயத்தினால் உடல் ஊனம் ஏற்பட்டால் விற்றவருக்கு 10 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை அபராதம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. டெல்லி மற்றும் குஜராத்திற்கு பிறகு கள்ளச்சாரயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் நடைமுறைப்படுத்த உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது…
sources;dinasuvadu.com
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…