ஓமைக்ரான் தொற்று பரவல் : தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – டெல்லி அரசு!
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார்.
உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகையான ஓமைக்ரான் வகை தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. அதிலும் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் இரண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதிய வகை வைரஸ் ஓமைக்ரானை எதிர்கொள்ள டெல்லி அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் பொது முடக்கம் விதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்படும் எனவும், ஆனால் தற்போது வரை அந்த சூழ்நிலை ஏற்படவில்லை. இருவர் மட்டுமே தற்போது ஓமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.