HMPV வைரஸ் பரவல்… திருப்பதியில் இனி முகக்கவசம் கட்டாயம்!
HMPV தொற்று பரவி வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமிதரிசனம் செய்யும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD) சேர்மன் BR நாயுடு கூறியுள்ளார். சீனாவில் அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.
இந்தியாவில் 7 பேருக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஜன.19ஆம் தேதி வரை சிறப்பு டோக்கன் வழங்கப்பட்டு பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, HMPV வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாநிலமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. HMPV வைரஸ் சாதாரண வைரஸ் தான் என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.