விமான நிலையத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சில விமான நிலையங்களில் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. விமான நிலையங்களில் கொரோனா நெறிமுறை மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதது கவலை அளிக்கிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து கொரோனா விதிகளும் விமான நிலையத்தில் முழுமையாக பின்பற்றப்படுவதை அனைத்து விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், விமான நிலையத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் எனவும் விமானத்தின் உள்ளே முகமூடிகளை சரியாக அணியாவிட்டால் அல்லது கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் பயணிகள் விமானங்களில் இருந்து “டி-போர்டிங்” விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மூன்று உள்நாட்டு விமானங்களில் கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட 15 பயணிகளை மூன்று மாதங்களுக்கு தடை செய்யக்கூடும் என்று டிஜிசிஏ அதிகாரி ஒருவர் கடந்த வாரம் தெரிவித்தார். இண்டிகோவின் ஒன்பது பயணிகள், அலையன்ஸ் ஏர் நான்கு மற்றும் ஏர் ஏசியா இந்தியாவின் இரண்டு பயணிகள் மார்ச் 15 முதல் மார்ச் 23 வரை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல், தினசரி இறப்பு எண்ணிக்கையிலும் அதிகரித்து வருகிறது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,000-க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நேற்று 56,211பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், இந்தியாவில் மொத்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,95,855 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,114 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிக்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,40,720 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும்…
சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…