சரக்கு விமானமாக மாறிய ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் .!
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அனைத்து பயணிகள் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையெடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றியுள்ளது .ஸ்பைஸ் ஜெட் விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு அவசர தேவைக்கான 11 டன்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்கிறது. பயணிகள் அமரும் இருக்கைகளில் சரக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
To meet the ever-growing demand of cargo n to keep abreast with the supply of essential items & medical consumables, SpiceXpress flight SG 7101 from Delhi to Chennai created history by transporting cargo in the passenger cabin of the aircraft @HardeepSPuri @AjaySingh_SG @MoCA_GoI pic.twitter.com/fikPI1EznG
— SpiceJet (@flyspicejet) April 7, 2020
இந்த ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை இந்த பயணிகள் விமானம் பயன்படுத்தப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.