அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட், விமானத்தின் கேபினில் ஏற்பட்ட புகை.!
கோவா-ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் புகை வந்த பிறகு அவசரமாக தரையிறங்கியது.
ஸ்பைஸ்ஜெட் விமானத்தின், ஏ.சி யில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக விமானத்தின் கேபினில் புகை வந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறங்கியது. கேபின் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் பட்ஜெட் கேரியர், அதன் அனைத்து செயல்பாட்டு Q400 விமான இயந்திரங்களையும் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது ஆயில் மாதிரிகளை என்ஜின் தயாரிப்பாளர் பிராட் & விட்னிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, குறைந்த கட்டண விமான நிறுவனங்களிடம் இதுபோன்ற 28 என்ஜின்களையும் ஒரு வாரத்திற்குள் போரோஸ்கோபிக் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டது.