மும்பை-டெல்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்த புகைப்படத்தை விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதில் “பாதுகாப்பு என்பது எங்களது மிகுந்த அக்கறை, எந்த நேரத்திலும் விமான நிறுவனம் அதனுடன் சமரசம் செய்யாது. தேவையான நடவடிக்கைகளுக்காக நாங்கள் இதை சம்பந்தப்பட்ட தலைவரிடம் நிச்சயமாக தெரிவிப்போம். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் ” என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு விமானம் நடுவானில் இருக்கும்போது ஒரு ஜன்னல் முற்றிலுமாக உடைந்தால் விமானத்தின் உள்ளே அழுத்தப்பட்ட காற்று வெளியேறி, கேபின் அழுத்தம் ஏற்படும்.ஒரு விமானத்தில் உடைந்த ஜன்னலுக்கு அருகில் பயணம் செய்தால் அது பயணிகளை உறிஞ்சக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
விமானத்தில் ஜன்னல் உடைந்து இருந்தால் சில நொடிகளில் விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலை மாறுபட்டு கேபின் முழுவதும் சத்தமாக மாறும்.அப்போது பயணிகள் சுவாச பிரச்சினைகளையும் எதிர்கொள்ளலாம் எனவும் கூறினர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 8152 விமானத்தில் ஜன்னல் சிதறி இருந்தது தவிர முற்றிலும்உடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…