ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தொடங்கியுள்ளது. பெரும்பாலான சீன பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், இது குறித்து வாடிக்கையாளர்கள் தெரியாமல் இருக்கின்றனர் என CAIT கூறுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பொருளிகளிலும் (country of origin) அதாவது, இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரை கட்டயமாக குறிப்பிட வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு BCCI-யை விவோ-வின் ஸ்பான்சர்ஷிப்பையும், வேறு எந்த சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் சில நாள்களாக ஓங்கி உள்ளது.
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…