திருப்பதியில் இன்று மூத்த குடிமக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் அனுமதி..

Default Image

 திருப்பதி கோயிலில் இன்று மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு மாதம் 2 நாட்களுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச சிறப்பு தரிசனம்  அனுமதி கொடுக்கப்படுகிறது.

அதனால் இன்று மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு 1,000 பேரும் , மதியம் 2 மணிக்கு 2,000 பேரும் , மாலை 3 மணிக்கு 1,000 பேரும் என மொத்தம் 4,000 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான டோக்கன் திருமலை அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காட்டி பெற்றுக்கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்