சிறப்பு அந்தஸ்து?? திரும்ப பெறப்படுமா?? ரவிசங்கர் திட்டவட்டம்

Default Image

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டமைப்பை அண்மையில் உருவாக்கியது.

இக்கூட்ட அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.அதே போல்  துணைத்தலைவராக மெகபூபா முப்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய பரூக் அப்துல்லா குப்கர் கூட்டமைப்பு தேசத்துக்கு எதிரானது அல்ல.அது பாஜகவுக்கு எதிரானது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதே இக்கூட்டமைப்பின் நோக்கம்

 ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் தங்கள் உரிமைகளை திரும்ப பெறவேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்று தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மெகபூபா முப்தி தேசியக் கொடியை அவமதித்ததாக அமைச்சர்குற்றம் சாட்டினார்.

மேலும்  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றியே ரத்து செய்யப்பட்டுள்ளாதால் அதற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்