சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் தனி விமானம் புறப்படுகிறது. இந்த விமானத்தில் 423 பேர் பயணம் செய்யக்கூடிய ஏர் இந்தியாவின் ஜம்போ பி747 என்ற ஒரு தனி விமானம் புறப்படுகிறது . இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து சீனாவிற்கு செல்ல உள்ளது.
ஏற்கனவே சீனாவில் இருந்த தங்கள் நாட்டின் மக்களை அமெரிக்கா ,பிரான்ஸ் போன்ற நாடுகள் மீட்ட நிலையில் தற்போது இந்தியா சீனாவில் உள்ள வுஹான் நகரில் இருக்கும் இந்தியர்களை மீட்க இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் புறப்படுகிறது.
வுஹான் நகரில் மருத்துவ படிப்பு மற்றும் பல்வேறு படிப்புகள் படிக்க இந்திய மாணவர்கள் பலர் சீனாவில் உள்ளனர்.மாணவர்கள் மட்டுமல்லாமல் பல இந்தியர்கள் வேலையும் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அங்கு உள்ள இந்தியர்களை நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களை கோரிக்கை வைத்த நிலையில் சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தனி விமானத்தை அனுப்ப உள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த பாதிப்பால் தினமும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் 1,900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சீன அரசு கூறியுள்ளது.நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…