சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாகரியா சக்ரவர்த்தி, இந்திரஜித் சக்ரவர்த்தி, சந்தியா சக்ரவர்த்தி, ஷோயிக் சக்ரவர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி உள்ளிட்ட பலர் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார்.
இதனால், பீகார் போலீசார் தனிப்படை அமைத்து மும்பையில் விசாரணை நடத்தியது. ஆனால், தங்களுக்கு மும்பை காவல்துறையினர் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீகார் போலீசார் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சுஷாந்த் சிங் தந்தை மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இன்று சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாக ரியா சக்ரவர்த்தி, இந்திரஜித் சக்ரவர்த்தி, சந்தியா சக்ரவர்த்தி, ஷோயிக் சக்ரவர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி மற்றும் பலர் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கானது பணமோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய விஜயமல்லையா மற்றும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு(Special CBI) வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…