பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர் !!!
- இங்கிலாந்து பிரதமர் இம்ரான்கான் உடன் பேசும் போது பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத குழுக்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்
பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக கடந்த 27-ம் தேதி வந்தன. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தனர்.
ஆனால் இந்த நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக “மிக்-21” ரக இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.
“மிக்-21” ரக விமானத்தில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தனர். அபிநந்தனை ஜெனீவா ஒப்பந்தத்தின் படி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.
தொடர்ந்து சர்வதேச அளவில் தரப்பட்ட அழுத்தத்தினால் பாகிஸ்தான் இதற்கு ஒப்புதல் அளித்தது. பின்பு அபிநந்தனை இந்தியாவிடம் முறைப்படி பாகிஸ்தான் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.
இங்கிலாந்து பிரதமர் இம்ரான்கான் உடன் பேசும் போது பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத குழுக்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்தியாவிடம் இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்கு பாராட்டு களையும் தெரிவித்தார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே.