Modi
டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல், நிலையான எரிசக்தி மாற்றம் ஆகியவை குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தல்: மிசோரம், சத்தீஸ்கரில் இன்று வேட்மனு தாக்கல் தொடக்கம்!
இந்த மாநாட்டில், சபாநாயகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும்.
அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டிய நேரம் இது. மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம் சவாலுக்கு தீர்வைக் கொடுக்காது. உலகத்திற்கு பெரிய சவாலாக மாறியுள்ள பயங்கரவாதம். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது குறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…