டெல்லியில் நாடாளுமன்ற சபாநாயகர்கள் ஜி 20 உச்சிமாநாடு..! பிரதமர் மோடி உரை..!

Modi

டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.  இந்த மாநாடு “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல், நிலையான எரிசக்தி மாற்றம் ஆகியவை குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவை தேர்தல்: மிசோரம், சத்தீஸ்கரில் இன்று வேட்மனு தாக்கல் தொடக்கம்!

இந்த மாநாட்டில், சபாநாயகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும்.

அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டிய நேரம் இது. மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம் சவாலுக்கு தீர்வைக் கொடுக்காது. உலகத்திற்கு பெரிய சவாலாக மாறியுள்ள பயங்கரவாதம். பயங்கரவாதத்திற்கு எதிராக  போராடுவது குறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்