நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்க.. உள்துறைக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்.!
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது.
நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.!
அதே போல நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர். அப்போது நீலம் , நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. மத்திய அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். எங்கள் மீது கவனத்தை திருப்பி எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றே இவ்வாறு செய்தோம் என பேசினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது யாருக்கும் நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அனுமதி கிடையாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றம் செல்லும் அனைத்து சாலைகளும் முழுதாக அடைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பை முழுதாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை செயலகத்திற்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.