“இசை ஆர்வலர்களின் இதயங்களில் உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார் எஸ்.பி.பி!”- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
உடல்நலக்குறைவால் காலமான எஸ்.பி.பி. மறைவிற்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்தார். 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அவரின் மறைவிற்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்தார். அந்த பதிவில் அவர், “பாடகர் காந்தர்வ எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உயிரிழந்த செய்தியினை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.” என தெரிவித்தார்.
గాన గంధర్వుడు ఎస్పీ బాలసుబ్రహ్మణ్యం గారు ఇక లేరన్నవార్త దిగ్భ్రాంతికి గురిచేసింది. 16 భాషల్లో 40వేలకు పైగా పాటలు పాడి సంగీత ప్రియుల హృదయాల్లో సుస్థిర స్థానం సంపాదించుకున్నారు. ఆయన ఆత్మకు శాంతి చేకూరాలని ప్రార్ధిస్తూ.. వారి కుటుంబ సభ్యులకు ప్రగాఢ సంతాపం తెలుపుతున్నాను.#RIPSPB
— YS Jagan Mohan Reddy (@ysjagan) September 25, 2020
மேலும், “16 மொழிகளில் 40,000 பாடல்களைப் பாடியுள்ள இவர், இசை ஆர்வலர்களின் இதயங்களில் உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார். அவரது ஆத்மாவுக்கு சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.