ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அந்தவகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த வருடம் ஜூன் 3ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை வருகின்ற செம்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், கேரளாவில் உள்ள தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயன் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதன் காரணமாக கேரளாவின் தென் மாவட்டங்களான பத்தினம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், திருவனந்தபுரம், மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
6 மாவட்டங்களிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…