ISC 12வது தேர்வு முடிவுகள்: தென் மண்டலம் சாதனை!!

இந்திய பள்ளி சான்றிதழ் (ISC) 12வது முடிவு 2022 இன்று  அறிவிக்கப்பட்டது, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 99.38 சதவீதத்தை தொட்டது.

தென் மண்டலம் 99.81 சதவீத தேர்ச்சியுடன் முதலிடமும், மேற்கு மண்டலம் 99.58 சதவீதம், வடக்கு மண்டலம் 99.43 சதவீதம் மற்றும் கிழக்கு மண்டலம் 99.18 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.  வெளிநாட்டுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில், 99.64 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒரு மாணவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

மாநில வாரியான ISC முடிவுகளில், இந்த ஆண்டு ISC 12 வது தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால், டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தில் தேர்ச்சி சதவீதம் 100 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முடிவில், ஆண்களை விட பெண்கள் சிறப்பாக செயல்பட்டனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.25 சதவீதமாகவும், மாணவர்களின் 99.26 சதவீதமாகவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்