தாம்பரம்-மங்களூருக்கு சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தெற்கு ரயில்வே : ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ஏசி (AC) சிறப்பு ரயில்களை அறிவித்து பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக இயக்கப்படவுள்ள அந்த ரயில்கள் தாம்பரம் மற்றும் மங்களூரு சந்திப்பை இணைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவைகள் ஜூன் மற்றும் ஜூலை 2024 தொடக்கத்தில் இயக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
தாம்பரம்-மங்களூரு AC சிறப்பு ரயில்:
தாம்பரம் – மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (எண் 06047) : இந்த சிறப்பு ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது “ஜூன் 14, 16, 21, 23, 28, 30″ ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 13:55 மணிக்குப் புறப்படும். எனவும், மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு சந்திப்பை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
திரும்பும் திசை மற்றோரு ரயில் (எண்06048) மங்களூரு சந்திப்பு – தாம்பரம் : இந்த ரயிலானது மங்களூரு சந்திப்பில் இருந்து ஜூன் 15, 17, 22, 24, 29, மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் மதியம் 12:00 மணிக்குப் புறப்படும். திங்கட்கிழமைகளில் இந்த ரயில் மறுநாள் மாலை 4.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மேலும், இந்த சிறப்பு ரயில்கள் சென்னை எழும்பூர், பையனூர், பெரம்பூர், அரக்கோணம், ஈரோடு, திருப்பூர், காட்பாடி, வடகரை, தலச்சேரி, ஜோலார்பேட்டை, சேலம், ஒட்டப்பாலம், ஷோரனூர், போத்தனூர், பாலக்காடு, திரூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.