ஒருவர் எந்த மண்டலத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ அதனை பொறுத்தே பணி நியமனம்.! ரயில்வே நிர்வாகம் விளக்கம்.!
ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது – தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில் வெற்றியடைந்து, அதில் தேர்ச்சி பெற்ற 541 பேருக்கு திருச்சி பொன்மலை ரயில்வே நிலையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் 40 பேர் மட்டுமே தமிழர்கள். இதனால் ரயில்வே தேர்தலில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தை திருச்சி பொன்மலையில் தொடங்கினர்.
இது தொடர்பாக அண்மையில் தெற்கு ரயில்வேயானது விளக்கமளித்துள்ளது. அதில் ரயில்வே பணிகளில் எந்தவித பாகுபாடுமின்றி பணி நியமனம் நடைபெற்று வருகிறது. சென்னை, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், பெங்களூர், புவனேஸ்வர், திருவனந்தபுரம், கவுகாத்தி உட்பட 21 இடங்களில் ரயில்வே பணி நியமன ஆணையம் உள்ளது.
இந்த பணி நியமன ஆணையங்கள் மூலமாகவே அனைத்து பணியாளர்களும் முறையாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். திருச்சி பொன்மலையில் கடந்த 4ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இவர்களுக்கு மத்திய அரசின் அறிவுரைப்படி ஆகஸ்ட் 31ம் தேதி பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.
2018 ஆம் ஆண்டில் ரயில்வேதுறையில் 3,218 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில், 51 சதவீதம் பேர் தமிழர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 17 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உரிய கல்வி தகுதியை பெறவில்லை எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 17 சதவீதத்தில் 53% பெயர் லோகோ பைலட் பணி மற்றும் டெக்னிக்கல் பணிகளில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே பணியை பொருத்தவரை ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே மண்டலம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.