கொரோனோ விவகாரம்… நிவாரண முகாம்களில் உள்ளோர்கள் உணவுக்காக ரூ. 50 இலட்சம் மதிப்பிலான அரிசியை இலவசமாக அளித்த முன்னால் கேப்டன் கங்குலி…

Default Image

நம் அண்டை நாடான சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் தொற்று நோய்  தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.இதன் தாக்கம் இந்திய்யாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் 13 பேர் இந்த நோயின் தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த  செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தினக்கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொருளாதார ரீதியாக  பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு, உதவிடும் வகையில், ரூபாய்  50 லட்சம் மதிப்புள்ள அரிசியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இலவசமாக வழங்கியுள்ளார்.  இதுதொடர்பாக நேற்று  அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு இல்லங்கள் போன்ற நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்க உதவும் பொருட்டு, இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவ்ரவ் கங்குலி மற்றும் லால் பாபா அரிசி ஆலை ஆகிய  இருவரும் இணைந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்குகின்றனர் என்ற செய்தி மனதிற்கு மிகுந்த  நெகிழ்ச்சி அளிக்கிறது.இந்திய அணியின் முன்னால் கேப்டன்  கங்குலியின் இந்த செய்கை மற்றவர்களையும் இதேபோல உதவிகளை செய்யத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறோம்  என்று  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்