தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்பு ..!
தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவி பிராமண நிகழ்வு தெலுங்கானா ஹைதிராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா அமைச்சர்கள், தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், வேலுமணி தங்கமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தனது ஆளுநர் பதவி ஏற்றவுடன் முதன் முதலாக தனது தந்தை குமரி ஆனந்திடம் ஆசி பெற்றார்.