காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார் அவர்கள் மன்னிப்பு கோரி ட்வீட்.
நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, ‘அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது? நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கிருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறி விட்டதால், இதை நான் சமாளிக்க முடியாது அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார், ‘ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால், அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும், நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள்’ என்று பேசினார்.
காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார் அவர்கள் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு கேட்டுக்கொள்கிறேன். கொடூரமான குற்றத்தை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் நான் அவ்வாறு பேசவில்லை. எந்த முன் யோசனையும் இன்றி திடீரென்று அவ்வாறு பேசி விட்டேன். இனி மேல் மிகவும் கவனமாக நான் பேசுவேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…