இந்தோனிசியாவுக்கு ஏற்பட்ட மோசமான நிலையில் இந்தியா துணை நிற்கும்.! பிரதமர் மோடி வருத்தம்.!

Default Image

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும். – பிரதமர் மோடி ஆறுதல்.

இந்தோனேசியா நாட்டில் ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 13,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

இதற்கு பல நாட்டு தலைவர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நமது நாட்டு பிரதமர் மோடியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தி என்னை வேதனை அடைய வைத்துள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என தனது ஆறுதலை கூறியுள்ளார் பிரதமர் மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்