( SOPs )வெளியீடு.! உணவகங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.!

Default Image

ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

அவ்வாறு உணவகங்கள்திறக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  • உணவகத்தில் இருக்கைகளுக்கு இடையே போதுமான சமூக இடைவெளி பின்ப்பற்ற வேண்டும்.
  • மெனு கார்டுகளை ஒவ்வொரு முறையும் மாற்றி பயன்படுத்த வேண்டும்.
  • துணி நாப்கின்களுக்கு பதிலாக, நல்ல தரமான ஒருமுறை மட்டுமே பேப்பர் நாப்கின்களை பயன்படுத்த வேண்டும்.
  • கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
  • சமூக இடைவெளி தூர உறுதிப்படுத்த ஹோட்டல் நிர்வாகம் அதற்கான ஆட்களை நியமிக்க வேண்டும்.
  • டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை மக்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.
  • உணவு விநியோக ஊழியர்கள் உணவு பார்சலை நேரடியாக மக்களுக்கு கொடுக்கக்கூடாது.அதற்கு பதிலாக வாடிக்கையாளரின் அறை வாசலில் வைக்க வேண்டும்.
  • ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் சாப்பாட்டுக்கு பின்பு அறைகள் மற்றும் சமையலறைகளை தவறாமல் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்