இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசி வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் சொந்த தயாரிப்பான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து தற்பொழுது பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பல தடுப்பூசிகள் இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பெறப்பட உள்ளதாகவும் இது பெரியவர்கள் மட்டுமல்லாமல் கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வரும் எனவும், இதன் மூலமாக நாட்டில் பலரும் தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…