விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியீடு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை வெளியிடவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும், மஹாத்மா காந்தி படம் பொறித்த 10 ரூபாய் நோட்டுகளை போலவே, இந்த ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.