புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2,000 பேருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ள சோனு சூட்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2,000 பேருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ள சோனு சூட்.
கொரோனா காலத்தில் வேலை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கு உதவிய நடிகர் சோனு சூட் தற்பொழுது 20,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் தாயகம் திரும்ப உதவிய இவர், சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் கூட உடனடியாக உதவிக்கரம் நீட்டும் நல்லுள்ளம் கொண்டவர்.
இந்நிலையில் தற்போது ’பிரவாசி ரோஜ்கர் எனும் வேலைவாய்ப்பு போர்ட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன்மூலம் நொய்டாவில் கார்மெண்ட் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி ஏற்படுத்த விருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில், நொய்டாவில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ள இருபதாயிரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வசதி வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். NAEC தலைவர் ஸ்ரீ லலித் ஆதரவுடன் இந்த உன்னத பணியை சிறப்பாக செய்ய இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.