மருத்துவ துறையில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி சோனியா கடிதம்
மருத்துவ துறையில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி சோனியா கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே மருத்துவ படிப்பில், ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்து வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், நீட் தேர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இட ஒதுக்கீட்டை மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.2017 முதல் 11,000 ஓபிசி பிரிவினர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை இழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.