பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாது – உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா,ராகுல் கடிதம்
பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறிப்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.
இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாது என்று உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியும் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பியுள்ளார்.