சோனியா காந்தியின் மார்பிங் வீடியோ..! ஆன்லைனில் பதிவிட்ட நபர் கைது..!
சோனியா காந்தியின் மார்பிங் வீடியோவை ஆன்லைனில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மார்பிங் வீடியோ ஒன்றை சமூக ஊடக தளத்தில் ஒருவர் வெளிட்டுள்ளார். ராஜஸ்தானின் பிரதாப்கரில், பிபின் குமார் சிங் சாண்டில்யா என்ற நபர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மார்ஃபிங் மற்றும் எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை சமூக ஊடக தளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் மார்பிங் வீடியோ ட்விட்டர் அதிகாரிகளின் பார்வைக்கு வந்ததும் அவரது பதிவை நீக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பிபின் குமார் அவர்களது எச்சரிக்கையை புறக்கணித்ததால், ட்விட்டர் அதிகாரிகளால் அவரது பதிவு தடுக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பிபின் குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிபின் குமார் சிங்கை, மார்ச் 14 வரை காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.