“உடனடி நடவடிக்கை எடுங்கள்” பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்..!
கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க தேவையான முக்கிய மருந்து ஆம்போடெரிசின்-பி – பற்றாக்குறையை நிலைமையை சரிசெய்ய வேண்டும் என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் “கருப்பு பூஞ்சை” அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க தேவையான முக்கிய மருந்து ஆம்போடெரிசின்-பி – பற்றாக்குறையை நிலைமையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிற சுகாதார காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இந்த நோய் வரவில்லை எனவும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கீழ் கருப்பு பூஞ்சை சேர்க்க கோரிக்கை வைத்தார். தொற்றுநோய்கள் நோயின் சட்டத்தின் கீழ் கருப்பு பூஞ்சை ஒரு தொற்றுநோயாக அறிவிக்க அரசு மாநிலங்களைக் கேட்டுள்ளதாக காந்தி கூறினார்.
இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க போதுமான உற்பத்தி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதை உறுதிப்படுத்தவும், அத்துடன் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கட்டணமின்றி நோயாளி பராமரிப்பு வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.