விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுந்தியுள்ளார். அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் எம்.பி.க்களின் சம்பளத்தை 30% குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சோனியா காந்தி வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான நிதிகளை திரட்டுவதற்கு, சிக்கன நடவடிக்கைகள் தேவை என தெரிவித்துள்ளார்.
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் இந்த தொகை புதிய மருத்துவமனை உள்கட்டமைப்புகளை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு செலவிடலாம் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது என்றும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Congress President and CPP Chairperson Smt. Sonia Gandhi writes to PM Modi suggesting various measures to fight the COVID-19 pandemic. pic.twitter.com/77MzCYiokl
— Congress (@INCIndia) April 7, 2020