காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காணொளி காட்சி மூலமாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி அனல்பறக்கும் விவாதத்துடன் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. காங்கிரஸ் கட்சியில் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்றும் அடுத்த ஆறு மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…